Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சனி-புதன் உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம்: நாளை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Saturn Mercury Make Ardha Kendra Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களையும் உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி அனைத்து கிரகங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதோடு, மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களின் அடிப்படையில் பலன்களை வழங்குவார். இதனால் இவர் கர்ம பலனைத் தருபவராக கருதப்படுகிறார்.

சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படும் புதன், சனி பகவானுடன் சேர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி யோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் அர்த்த கேந்திர யோகம்.
இந்த யோகத்தின் போது சனி மற்றும் புதன் ஒன்றுக்கொன்று 45 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலனைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி மற்றும் புதனால் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறவுள்ளனர். ஏனெனில் இந்த யோகத்தின் போது புதன் 9 ஆவது வீட்டிலும், சனி 3 ஆவது வீட்டிலும் இருப்பார்கள். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
புதன் மற்றும் சனியால் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். ஏனெனில் இந்த யோகத்தின் போது 8 ஆவது வீட்டில் சனியும், 6 ஆவது வீட்டில் புதனும் இருப்பார்கள். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திறமையால் எதிரிகளை திறம்பட வெற்றி காண்பீர்கள். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆனால் பண பரிவர்த்தனை விஷயங்களில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சு மற்றும் கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்
புதன் மற்றும் சனியால் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் இரட்டிப்பு உயர்வு ஏற்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications