Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
கும்பத்தில் நிகழும் சனி-புதன் சேர்க்கை: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்கு ஒரு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Mercury Conjunction In Aquarius 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஏதோ ஒரு வகையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் புதன் பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் கும்பத்தில் நுழைவதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக தொழில் மற்றும் படிப்பில் இந்த சேர்க்கையின் தாக்கம் தெரியும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது கும்ப ராசியில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். தொழில் ரீதியாக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வியாபாரிகள் புதிய ஆர்டர்களை பெற வாய்ப்புள்ளது. நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதனால் நிதி நிலையில் உயர்வு ஏற்படக்கூடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். தொழில் ரீதியாக, நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்தையும் காணக்கூடும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிககும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பெரும் வெற்றியை அடைவீர்கள். வணிகர்கள் மற்றும் பங்கு சந்தையுடன் தொடர்புடையவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications