Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Vipreet Rajyog 2025: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். சனி பகவான் இப்படி நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக இருக்கும். தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசிக்கு சனி பகவான் மார்ச் மாதத்தில் நுழைந்தார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். மீன ராசிக்கு சனி பகவான் நுழைந்ததால், கும்பம், மீனம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. அதோடு சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்கியது. அதோடு சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் இருப்பதால், விபரீத ராஜயோகத்தையும் சனி பகவான் உருவாக்கினார்.

வக்ர நிலையில் சனி பகவான் இருப்பதால், இதுவரை விபரீத ராஜயோகத்தால் இந்த ராசியை சேர்ந்தவர்கள் சிறப்பான பலன்களை பெறாமல் போயிருக்கலாம். ஆனால் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இதுவரை நல்ல பலன்களைப் பெறாமல், கஷ்டப்பட்டு வந்த இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக வாழ்வில் ஏராளமான நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.
இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையின் எந்த பகுதிகளில் எல்லாம் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கிறது. ஏனெனில் சனி பகவான் 8 ஆவது வீட்டில் உள்ளார். 6 ஆவது மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 8 ஆவது வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. அதோடு சனி பகவானின் 3 ஆவது பார்வை 10 ஆவது வீட்டிலும், 7 ஆவது பார்வை செல்வத்தின் வீட்டிலும், 10 ஆவது பார்வை 5 ஆவது வீட்டிலும் விழுகிறது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நவம்பர் முதல் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். இனி 2027 வரை பணியிடத்தில் வெற்றியும், நிலையான வருமானமும் கிடைக்கும்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர், வாழ்க்கைத் துணை மற்றும் உடன் வேலை செய்வோர் போன்றோரின் முழு ஆதரவு இனி கிடைக்கும். இதுவரை பதட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தால், இனிமேல் அந்நிலை மாறி, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் மாறும்.
நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், நவம்பர் முதல் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் கடன் வாங்கியிருந்தால், அதை அடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்தால், நவம்பருக்கு பின், உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும். மொத்தத்தில் விபரீத ராஜயோகத்தால் நவம்பர் முதல் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications