சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடி கோடியா கொட்டப்போகுதாம்...!

Saturn Direct In Aquarius: நவம்பர் 15, 2024 அன்று சனி, கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். கும்ப ராசியில் சனியின் நேரடி தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் எப்படி மோசமான பலன்களைத் தரக்கூடியவரோ அதேபோல ஆசீர்வாதத்தையும் தரக்கூடியவர்.

சனிபகவான் அர்ப்பணிப்பு, தொழில் முன்னேற்றம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சனிபகவானின் இந்த வக்ரநிவர்த்தி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும், அதேபோல சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான பலன்களை அளிக்கும். இந்த பதிவில் சனிபகவானால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Saturn Direct In Aquarius These Zodiac Signs Will Get Positive Results

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, முன்னர் 10 மற்றும் 11 ஆம் வீடுகளை ஆட்சி செய்த சனி இப்போது 11 ஆம் வீட்டிற்கு நேரடியாக வருகிறார். இந்த மாற்றத்தின் போது, ​​பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் போன்றவற்றில் வெற்றியைக் காணலாம். இந்த நேரத்தில் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான நேர்மறையான தொடர்புகளை நீங்கள் உருவாக்கலாம், மேலும் உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கலாம். அலுவலகச் சூழல் உங்களுக்கு ஏற்றதாக மாறும்.

நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்கள் லாபத்தை அதிகரிக்கவும் புதிய வணிக வாய்ப்புகளை ஆராயவும் இதுவே சிறந்த தருணமாக இருக்கும். கூட்டு வியபாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். நீங்கள் அசாதாரண செழிப்பை அனுபவிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 9 மற்றும் 10 ஆம் வீடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவால், நீங்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம். மேலும் நீங்கள் அலுவலகத்தில் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறலாம். உங்கள் பணி வாழ்க்கையின் ஒவ்வொரு நேர்மறையான அம்சத்தையும் நீங்கள் அனுபவிக்க முடியும். உங்கள் உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.

நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால், புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் வரலாம். நீங்கள் புதிய கூட்டணிகளை நிறுவுவது மற்றும் லாபகரமான புதிய வியாபாரத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 6ம் வீட்டில் சனி நேரடியாக வருகிறார். இது 5 வது வீட்டையும் 6 வது வீட்டையும் ஆளுகிறது. கும்ப ராசியில் சனி நேரடியாக இருப்பது உங்களின் தொழில் இலக்குகளை அடைய உதவும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய முடியும், அது உங்கள் இலட்சியங்களை அடைய உதவும். மேலதிகாரிகளின்பாராட்டு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

உங்களின் திறமை சம்பள உயர்வு அல்லது பிற சலுகைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்பதை நிரூபிக்கலாம். நீங்கள் வியாபாரியாக இருந்தால், கும்ப ராசியில் சனி நேரடியாக இருப்பதால், உங்களுக்கு பெரிய நிதி ஆதாயங்கள் மற்றும் புதிய வணிக தொடர்புகளை உருவாக்கி, உங்கள் போட்டியாளர்களை வெற்றிபெற வாய்ப்புகள் உருவாகும். கூட்டு வணிகத்தில் பணியாற்ற நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் சிறந்த முடிவுகளை பெறலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 4 மற்றும் 5-ம் வீடுகளை சனி ஆட்சி செய்வதால் அவர்களுக்கு இது அதிர்ஷ்டகாலம். 5 ஆம் வீட்டில் சனி நேரடியாக வருவதால், துலாம் ராசிக்காரர்கள் அதிக நேர்மறையான முடிவுகளை பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் அறிவாற்றலை நீங்கள் சிறப்பாக பயன்படுத்தலாம் மற்றும் புதிய முதலீடுகள் மூலம் நீங்கள் பெரிய லாபம் பெறலாம்.

சனி தற்போது கும்ப ராசியில் இருப்பதால் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களையும், தொழிலில் முன்னேற வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம். நீங்கள் வழக்கத்தை விட அதிக பணத்தை சேமிக்க முடியும். உங்கள் நோக்கங்களை அடைய உதவும் புதிய வேலை வாய்ப்புகளை வெளிநாட்டில் நீங்கள் கண்டறியலாம்.
தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் திருப்தி மற்றும் நேர்மறையான முடிவுகளை பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 3ம் வீட்டில் சனிபகவான் நேரடியாக வருகிறார். இதனால் நீங்கள் குடும்பம், வணிகம் அல்லது தொழில் மற்றும் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறலாம். சனி நேரடியாக கும்ப ராசியில் இருக்கும்போது உங்கள் முன்னேற்றத்தில் சில ஆரம்ப தடைகள் இருக்கலாம். நீங்கள் அதிகமாக பயணம் செய்வதை நீங்கள் காணலாம். ஆனால் விரைவில் இந்த தடைகள் நீங்கி சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நீங்கள் வெளிநாட்டில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம், இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீங்கள் அலுவலகத்தில் செய்யும் கடினமான வேலைக்கான உங்கள் முயற்சிகளை உங்கள் மேலதிகாரிகள் அங்கீகரிப்பார்கள். நீங்கள் வணிகத்தில் இருந்தால், நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் மூலம் நீங்க பெரிய லாபத்தைப் பெறலாம், உங்கள் ஊழியர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி வெகுமதிகளைத் தரும் புதிய வணிகத் திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 15, 2024, 10:27 [IST]
Desktop Bottom Promotion