Latest Updates
-
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க..
சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 4 ராசிக்காரங்க நரகத்தை அனுபவிக்கப்போறாங்க...!
நவகிரகங்களில் மிகவும் கோபக்கார கிரகம் என்றால் அது சனிதான். நீதியின் கிரகம் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒருவரின் கடந்தகால செயல்களைப் பொறுத்து அவர்களுக்கு நல்ல பலன்கள் மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார்.
நவம்பர் 15, 2024 அன்று, சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார், இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் இதனால் நேர்மறை பலன்களை அனுபவித்தாலும், சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்படப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சனி வக்ர நிவர்த்தியால் மோசமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்ர நிவர்த்தி அவர்களின் மூன்றாவது வீட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறார், இது போராட்டங்கள் மற்றும் தாமதங்களைக் குறிக்கிறது, குறிப்பாக வேலையில் இருப்பவர்களுக்கு இது பெரிய தடைகளை ஏற்படுத்தும். இடையூறுகள் மற்றும் நிறைவேறாத ஆசைகளால் வேலையில் இருப்பவர்கள் முன்னேறுவது மிகவும் கடினமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியமாகும்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் காதலர்களுடன் மிகவும் பதட்டமான காலகட்டத்தை அனுபவிக்கலாம், உணர்வுரீதியாக அவர்களிடமிருந்து மிகவும் விலகியிருக்கலாம். வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், பெரிய நஷ்டத்திற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் இந்த சவாலான காலகட்டத்தை கண்டிப்பாக கடந்து வர வேண்டும். நம்பிக்கை மிகவும் அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஏற்கனவே சனி திசையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சனி வக்ர நிவர்த்தியால் அவர்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டம் உங்கள் அருகில் கூட வராது, அவர்கள் கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடைய முடியாது. சக ஊழியர்களின் ஆதரவின்மை பணியிடத்தில் சிரமங்களை அதிகரிக்கலாம், இது விரக்தி மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும்.
நிதிரீதியாக, கடக ராசிக்காரர்கள் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும், மேலும் எதிர்பாராத செலவுகள் அல்லது இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடல்நல பிரச்சினைகள், குறிப்பாக கால்கள் தொடர்பான சிக்கல்கள் எழலாம், எனவே வழக்கமான சோதனை அவசியம். கூடுதலாக, குடும்ப உறவுகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம், திடீர் வாக்குவாதங்கள் உறவுகளை பாதிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிவர்த்தியால், வேலையில் அழுத்தம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் போன்ற சிக்கல்களை அனுபவிக்கலாம். பணிச்சுமை அதிகமாகத் தோன்றலாம், இது மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். நிதிநிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் செலவுகள் எதிர்பாராத விதத்தில் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது அவசியம்.
ஈகோ பிரச்சினைகளால் உறவுகளுக்குள் விரிசல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டியாளர்களால் அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களுடன் சாத்தியமான மோதல்கள் எழலாம். சிம்ம ராசிக்காரர்கள் தவறான புரிதல்கள் மற்றும் மோதல்களைத் தவிர்க்க பணிவு மற்றும் பொறுமையுடன் உறவுகளை அணுக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விருச்சிகம்
சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் சவாலான காலகட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். கடினமாக உழைத்தாலும் அவர்களுக்கு உரிய பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்காது, இது அவர்களுக்கு கடுமையான விரக்தியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் சகஊழியர்களின் ஆதரவு குறைவாக இருக்கலாம் அவர்கள் தங்கள் விடாமுயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது.
புதிய முயற்சிகளைத் திட்டமிடுபவர்களுக்கு, எதிர்பாராத தடைகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தக் காலம் சிறப்பாக இருக்காது. தனிப்பட்ட உறவுகளும் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் தேவைப்படலாம், ஆனால் அவை கூடுதல் மன அழுத்தத்தையும் எதிர்பாராத செலவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
