Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சனி மற்றும் சூரியன் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, எனவே சூரியனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது ராசியை மாற்றுகிறது. இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும்.
அக்டோபர் 17 அன்று சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியின் இரண்டாவது வீட்டில் சூரியன் இடம் பெயர்ந்துள்ளார். இதே ராசியின் மற்றொரு வீட்டில் சனிபகவானும் இடம் பெற்றுள்ளார். இதனால் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து நவபஞ்சமயோகம் உருவாகிறது.

நவ பஞ்சமயோகம் மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகங்களில் ஒன்றாகும். சூரியன் தனது ராசியை மாற்றும் அடுத்த மாதம் வரை இந்த ராஜயோகம் நீடிக்கும். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களை பெறப்போகிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
நவ பஞ்சம ராஜயோகத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதமும் அடுத்த மாதமும் அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்களும், ஆதாயங்களும் ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் உங்களின் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் தோன்றும். நீங்கள் பொருளாதாரரீதியாக பெரும் முன்னேற்றம் அடையலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் 6ம் வீட்டில் அமர்வதால் இந்த நவபஞ்சம ராஜயோகம் அவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும். நவ பஞ்சம யோகம் ரிஷப ராசிக்காரர்கள் செய்யும் அனைத்திலும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். வேலையில் உங்களின் செயல்திறன் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும், இதனால் உங்களுக்கான அங்கீகாரம் தேடிவரும்.
அதுமட்டுமின்றி அவர்களின் தலைமைப் பண்புகளைக் கண்டு அவர்களுக்கு கூடுதல் அதிகாரமும், பொறுப்பும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நவ பஞ்சம ராஜயோகமும் சிறப்பான பலன்களைத் தரும். சூரியன் நேரடியாக துலாம் ராசிக்குச் செல்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களின் நம்பிக்கை மிகவும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த அல்லது தள்ளிப்போன வேலைகள் இந்த நேரத்தில் முடிவடையும்.
அவர்கள் செய்யும் காரியங்களில் வெற்றியுடன் திருப்தியும் உண்டாகும். வேலை சம்பந்தமாக சில பயணங்கள் செய்ய நேரிடலாம், ஆனால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபரத்தில் பெரிய லாபத்தை அளிக்கும் திட்டங்கள் தேடிவரும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

