Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 29 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
Sani Vakra Peyarchi 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
இந்நிலையில் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் இப்படி வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார். அதற்கு பின் வக்ர நிவர்த்தி அடைவார்.

சனி வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், ஜூன் 29-க்கு பின் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியையும், புகழையும் பெறுவார்கள். மேலும் தந்தையுடனான உறவு வலுவடையும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக இருக்கும். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே எங்காவது முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்தும் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் 29 முதல் பொற்காலமாக இருக்கும். உங்கள் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும். பணிபுரிபவர்கள் ஜூன் 29 முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வணிகர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications