Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் 2027 வரை இந்த 3 ராசிக்கு பிரச்சனையே வாழ்க்கையா இருக்கபோகுது.. உஷாரா இருங்க!
Sani Peyarchi 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் கிரங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இதனால் கிரகங்களில் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் நீடித்திருக்கும்.
நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணத்தை முடித்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த சனி பெயர்ச்சியானது 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த ராசியில் சனி பகவான் 2027 ஜூன் 02 ஆம் தேதி வரை இருப்பார்.

மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் ராசிக்கு சனி செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி போன்றவை தொடங்கவுள்ளது. அதோடு சில ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கவுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
வருமானத்தில் குறைவு ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வீட்டு உறுப்பினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். நிதி இழப்புகளை அதிகம் சந்திக்க நேரிடும். முக்கியமாக எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் பலமுறை யோசித்த பின்னரே செய்ய வேண்டும்.
கும்பம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியால் கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்கவுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2027 வரை இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும். உடன் வேலை செய்வோருடன் நிறைய பிரச்சனைகளையும், வாக்குவாதங்களையும் சந்திக்க நேரிடும்.
கடகம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரை சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் நிறைய அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் தாக்கம் இருப்பதால், நிதி இழப்புடன், நிதி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் பலவிதமான சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











