2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?

Rahu Transit In Capricorn 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு பகவான். இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர் மற்றும் ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு திடீர் வெற்றி, குழப்பம், தர்மசங்கடம், அரசியல், லட்சியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார்.

Rahu Transit In Capricorn 2026 List Of Lucky Zodiac Signs

பஞ்சாங்கத்தின் படி, ராகு பகவான் டிசம்பர் 05 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் 2028 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை இருக்கவுள்ளார். அதன் பின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். சனி பகவானின் ராசிக்குள் ராகு நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்போது மகர ராசிக்கு செல்லும் ராகுவால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்

டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்வதால், பணியிடத்தில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

ரிஷபம்

டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ராகு 9 ஆவது வீட்டிற்கு செல்வதால், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சியால் கஷ்டங்கள் குறைந்து வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ராகு பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். ராகு 5 ஆவது வீட்டிற்கு செல்வதால், கன்னி ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். புதிய நட்புகள் கிடைப்பதோடு, அந்த நட்புகளால் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இருந்தாலும், பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

டிசம்பர் மாத ராகு பெயர்ச்சியால் மகர ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை பிரகாசிக்கும். எதிர்பாராத அளவில் வாழ்வில் திடீர் மாற்றங்களைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 5, 2026, 11:15 [IST]
Desktop Bottom Promotion