Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
18 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் ராகுவால் 2025-ல் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப்போகுது...
Rahu Transit In Aquarius 2025: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக ராகு கருதப்படுகிறது. ராகு என்றாலே மோசமான கிரகமாக பலரும் நினைப்பதுண்டு. ஆனால் ராகுவின் ஆசி இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழலாம். இப்படிப்பட்ட ராகுவின் சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
இந்த ராகு கடுமையான பேச்சு, சூதாட்டம், சரும நோய்கள், பயணங்கள் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ராகு ராசியை மாற்றவுள்ளார். அதுவும் சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

ராகு சனி பகவானின் ராசிக்கு செல்வதால், அதன் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதனால் நிதி நிலை வலுவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்களைக் காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும். ராகுவின் தாக்கம் தொழிலில் இருக்கும் என்பதால், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
மிதுனம்
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் விதியில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. முக்கியமாக நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிந்திக்கும் திறன் மேம்படும்.
எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். இதன் மூலம் சிறந்த முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications