Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
2025-ல் ராகுவின் அருளால் இந்த 3 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வந்து, அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது...
Rahu Transit In Aquarius 2025: ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாகவும், ஒரு பாவ கிரகமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சனி பகவான், குரு பகவானைப் போன்றே ராகுவும் ஒருவருக்கு அளவில்லாத நன்மைகளை வழங்கும் அளவில் சக்தி வாய்ந்தது.
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி தான் பயணிப்பர். மேலும் ராகு மற்றும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் இருப்பர். அந்த வகையில் தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

ராகு கும்ப ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படுவதோடு, நீண்ட காலம் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ராகு சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக, அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் 2025-ல் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, நிதி ஆதாயமும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும்.
நிதி நிலை வேகமாக உயரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்வதன் மூலம் நிறைய லாபத்தைப் பெறுவீரகள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இன்னும் சிறப்பான பலன் கிடைக்க புதன்கிழமைகளில் கருப்பு எள்ளு விதைகளை தானம் செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆனால் உடன் வேலை செய்வோரிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களை ஏமாற்றலாம். முக்கியமாக உங்களின் செலவுகள் இந்த ஆண்டில் குறையும். பண வரவு அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான புதிய கதவுகள் திறக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த பயணம் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும்.
முக்கியமாக தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகள் ரிஸ்க் எடுத்தால், நல்ல பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கும் அடுத்த ஆண்டு அலுவலகத்தில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். சிலக்கு சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications