Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
2025-ல் நிகழும் ராகு புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Rahu Mercury Conjunction In Pisces 2025: கிரகங்களின் நிலைகளின் படி, 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஏற்படுவதோடு, கிரக சேர்க்கைகளும் உருவாகவுள்ளன. அதுவும் ஆண்டின் தொடக்கத்திலேயே ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது.
ஏற்கனவே ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் புதன் மற்றும் ராகு ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, திடீர் நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம், சொத்து வாங்கும் வாய்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஷேர் மார்கெட் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.
புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ராகுவின் ஆசியால் உங்கள் பிள்ளைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிப்ரவரியில் இருந்து ஒவ்வொரு துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பேச்சுத் திறமையால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். இதனால் வழக்கறிஞராக இருப்பவர்கள் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக ஏதாவது ஒரு நோயால் அவதிப்பட்டு வந்தால், ராகு-புதன் சேர்க்கை காலத்தில் சரியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
