Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
18 ஆண்டுகள் கழித்து புதனுடன் ஒன்றிணையும் ராகு: இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து, செல்வம் குவியப்போகுது..
Rahu Mercury Conjunction 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, பூமியிலும், மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தவிர கிரகங்கள் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து, சுப அல்லது அசுப யோகங்களையும் உருவாக்கி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ராகு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் பிப்ரவரி மாதத்தில் புதன் நுழையவிருக்கிறார்.

இதனால் பிப்ரவரி மாதத்தில் ராகு மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகள் கழித்து உருவாகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்தும் இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதனால் பண பிரச்சனைகள் தீரும். புது வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் இந்த ராகு புதனின் சேர்க்கை காலத்தில் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அதே சமயம் பெயரும் புகழும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications