Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிகளை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது!
Shadashtak Yog 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அதன் நிலைகளாலோ சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையால் ஷடாஷ்டக யோகம் தொடங்கவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். அதோடு பண இழப்புகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் ராகுவால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை தரப்போகிறது. அதுவும் கூட்டு தொழில் செய்து வந்தால், அந்த கூட்டாண்மை முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. கூட்டாளருடனான உறவு மோசமடையக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசல் ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் யாருடனும் வாக்குவாதம் அல்லது தோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலக அரசியலில் இருந்து சிலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், நீங்கள் அதற்கு பலியாகிவிடுவீர்கள். மேலும் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். மறைமுக எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்யக்கூடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வெற்றியும் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க வைக்கும். இதனால் உங்களின் பட்ஜெட் பாழாகலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிபடும் வாய்ப்புள்ளதால், உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கிய பிரச்சனைகள் இன்னும் தீவிரமாகலாம். முக்கியமாக ஏதாவது ஒரு விஷயம் மனதில் எப்போதும் அழுத்தத்தை உண்டாக்கி, மன அமைதியைக் கெடுக்கலாம். மொத்தத்தில் வாழ்க்கையே பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
