Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
2025-ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Rahu Ketu Transit 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் ராகு, கேது நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். அதுவும் 18 மாதத்திற்கு ஒருமுறை இவ்விரு கிரகங்களும் ராசியை மாற்றும்.
முக்கியமாக மற்ற கிரகங்களைப் போல இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசி ஏதும் இல்லை. தற்போது ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றங்கள் நிகழவுள்ளன. அதுவும் 2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி இந்த பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளனர்.

இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், இவ்விரு கிரகங்களின் ஆசிகளை பெறும் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வம் பெருகி, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் பலவிதமான நற்செய்திகளைப் பெறுவார்கள். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கலாம். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நிலம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
2025-ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நிறைய நன்கைமளைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
2025-ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயண்ங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு ராகு கேதுவின் ஆசியால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
