Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
புரட்டாசி மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Purattasi Matha Rasipalan 2025: புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. ஜோதிடத்தின் கிரகங்களின் ராஜவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வரை இருப்பார். இப்படி சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
இப்படி கன்னி ராசியில் சூரியன் செல்லும் போது பிறக்கும் மாதம் தான் புரட்டாசி. சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள புரட்டாசி மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதோடு, செல்வந்தராகும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். அதோடு தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும் பெறவுள்ளனர். இப்போது புரட்டாசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் புரட்டாசி மாதத்தில் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். வணிகர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களின் தன்னம்ப்கிகை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேம்படும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications