Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த 5 ராசிக்காரங்க நல்லவங்க மாதிரி நடிப்பதில் கில்லாடிகளாம்.. இவங்கள மிஞ்ச யாராலயும் முடியாது..
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே நல்லவர்கள் தான். ஆனால் சூழ்நிலை தான் ஒருவரை கெட்டவராக்குகிறது மற்றும் கெட்டவராக காட்டுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் ஒருவர் பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு, அந்நபரின் ராசி தீர்மானிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளும் அதிபதிகளை கொண்டுள்ளன. இந்த அதிபதிகள் தான் அந்த ராசியினரின் குணங்கள், எதிர்காலம் போன்றவை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் சில ராசிக்காரர்கள் தங்களை மிகவும் நல்லவர்களாக வெளிக்காட்டிக் கொள்வார்கள்.

அதற்காக பல நல்ல விஷயங்களையும் செய்வார். ஆனால் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் தங்களை நல்லவர்கள் மாதிரி காட்டிக் கொள்வதில் நம்பர் 1 என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே நன்கு பேசுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மையும், புத்திசாலித்தனமும் இருப்பதால், இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்ப வைப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் விரைவில் ஒட்டிக் கொள்வார்கள். அதன் பின் இவர்களின் நடத்தையில் மாற்றம் தெரியும். இதனால் இவர்கள் உண்மையானவர்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். இவர்கள் ஒருவருடன் நட்பாக பழகினால், அதற்கு பின் ஏதாவது சுயநலம் இருக்கலாம். மொத்தத்தில் இவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கும், மனதில் இருப்பதில் வேறொன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரங்க இயற்கையாகவே அழகான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்வார்கள். மிகவும் அமைதியானவராக இருப்பார்கள். யாருடனும் சண்டையில் ஈடுபடமாட்டார்கள். மரியாதையாக நடந்து கொள்வார்கள். இதனால் இவர்களை பார்க்கும் போது மிகவும் நல்லவர்களாக மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான குணத்தை மறைப்பார்கள். அதுவும் வாக்குவாதங்களை தவிர்க்க நல்லவர்களாக நடிப்பார்கள். இவர்கள் யாரை பாராட்டினாலும் அல்லது உதவினாலும் அது உண்மையாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தையும், அழகையும் மற்றவர்களுக்கு நன்கு தெரியும்படி பயன்படுத்துவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் அனைவரது கவனத்தை ஈர்க்கவும், பாராட்டைப் பெறவும் விரும்புவார்கள். அதற்கு இவர்கள் தானம் செய்வது, உதவி செய்வது போன்றவற்றை அதிகம் செய்வார்கள். இவர்களின் தன்னம்பிக்கையும், அழகும், இவர்களை நல்லவர்கள் மாதிரி வெளிக்காட்டும். ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் இப்படியான நல்ல காரியங்களை இவர்கள் செய்வது அன்பினால் அல்ல, சுற்றியிருப்பவர்கள் இவர்களை புகழ்வார்கள் என்பதற்காகத் தான். இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு மற்றவர்களின் கவனம் இவர்கள் மீது எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பார்கள். பொறுப்பானவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்கள் மாதிரி தெரிவார்கள். இவர்களின் நடத்தையை பார்க்கும் போதே அவர்கள் நல்லவர்கள் போன்று தெரியும். ஆனால் இவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக நல்லவர்ள் போன்று நடிப்பார்கள். இவர்களின் செயல்கள் நல்லது போன்று தெரிந்தாலும், அதற்கு பின்னிருக்கும் காரணம் நல்ல எண்ணத்தை விட வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இருக்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள், மற்றவர்களை நன்கு புரிந்து நடந்து கொள்வார்கள். இதனால் இவர்கள் நல்லவர்கள் போன்று தோன்றும். மேலும் இவர்கள் அடிக்கடி மற்றவர்களுக்கு உதவுவார்கள், கஷ்ட காலத்தில் ஆறுதலாக பேசுவார்கள். இவையெல்லாம் இவர்கள் மிகவும் நல்லவர்கள் என்று வெளிக்காட்டும். இவர்கள் மற்றவர்கள் மீது உண்மையாகவே அக்கறை காட்டினாலும், சில சமயங்களில் சுயநலத்துக்காக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











