Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த ராசிக்காரங்ககிட்ட எந்த ரகசியத்தையும் சொல்லிடாதீங்க.. இவங்க சரியான உளறுவாய்ங்க...
People Of These Zodiac Signs Not Able To Keep Secret: ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசியம் இருக்கும். இந்த ரகசியத்தை சில நேரங்களில் நமக்கு பிடித்த, நம்பிக்கையான ஒருவருடன் மட்டுமே பகிர்ந்து கொள்வோம். ஆனால் சிலரால் ரகசியங்களை பாதுகாப்பாக மனதில் வைத்துக் கொள்வது என்பது கடினமாக இருக்கும்.
அதுவும் சில ராசிக்காரர்களால் ஒரு விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கலாம். இப்படி சில ராசிக்காரர்களால் ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாததற்கு காரணம், அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் அந்த ராசிக்காரர்களின் அதிபதியாக இருக்கலாம். இப்போது எந்த ராசிக்காரர்களால் ரகசியங்களை பத்திரமாக வைத்து கொள்ள முடியாது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிகமாக பேசக்கூடியவர்கள். இவர்களால் ஒரு விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்வது என்பது முடியாது. இவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். ஒரு ரகசியத்தை கண்டறிந்தால், அதை மற்றவர்களுடன் சற்றும் தாமதிக்காமல் உடனே பகிர்ந்து கொள்வார்கள். இவர்களின் மனம் எப்போதும் இயக்கத்தில் இருக்கும். எனவே உங்களிடம் ஏதாவது ஒரு ரகசியம் இருந்தால், அதை மிதுன ராசிக்காரர்களை நம்பி சொல்லிவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ரகசியம் அனைவரிடமும் காட்டுத்தீ போல் பரவி விடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்ல நண்பர்கள் மற்றும் எப்போதும் ஆதரவாக இருப்பார்கள் ஆனால் இவர்களை நம்பி ரகசியங்களை சொல்லிவிடாதீர்கள். இவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். எப்போதும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் நன்மைக்காக ரகசியங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தினாலும், சிந்திக்காமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இவர்களிடம் உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்கள் மற்றும் திறந்த மனதுடன் மற்றவர்களுடன் பழகக்கூடியவர். இவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் ரகசியங்களை யோசிக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் இவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவைப் பேண விரும்புவார்கள். ஆனால் ரகசியங்களை வெளிப்படுத்துவது மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்பதை மறந்து விடுவார்கள். இவர்கள் நேர்மையையும், வெளிப்படையான தகவல்தொடர்பையும் விரும்புகிறார்கள், அது ஒருவரின் ரகசியங்களை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் கூட.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











