Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த 3 நட்சத்திரங்களில் பிறந்தவங்க எந்த வேலை செஞ்சாலும் அதுல ராஜாவா இருப்பாங்களாம்... உங்க நட்சத்திரம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். அதேபோல்தான் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்கென தனித்துவமான விதி உள்ளது. அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கணக்கில்லாமல் பணம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் இருக்கும், அதற்கேற்ப அவர்களுக்கான திறமைகளும், வாய்ப்புகளும் அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களின் திறமை, தந்திரம் மற்றும் மனஉறுதி மூலம் தாங்கள் நுழையும் துறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக அரியணையில் இருப்பார்கள். கூடுதலாக அவர்களின் பணம் சம்பாதிக்கும் திறன் இணையற்றதாகும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் துறையில் ராஜாவாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

திருவோணம்
வெற்றி பெறுவதற்காகவே பிறந்த ஒரு நட்சத்திரம் உள்ளது என்றால் அது திருவோணம்தான். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தீவிரமான பணி நெறிமுறை, ஒழுக்கம் மற்றும் தந்திரமான மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் வெற்றியைப் பற்றி கனவு மட்டும் காண்பதில்லை, அவர்கள் படிப்படியாக அதற்காகத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் அலுவலகப் பணியில் நுழைந்தாலும் சரி அல்லது தங்கள் சொந்த வியாபார சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினாலும் சரி, அவர்கள் நீண்ட கால ஆதாயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் எப்போது பொறுமையாக இருக்க வேண்டும், எப்போது துரிதமாக செயல்பட வேண்டும் மற்றும் உச்சத்தை அடையும் வரை நிலையாக இருப்பது எப்படி என்பதை நன்கு அறிவார்கள். அவர்களின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் பணிவுடனேயே இருப்பார்கள்.
விசாகம்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றல் மற்றும் வலிமையின் அடையாளமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்கள் கவனிக்காமல் விடக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அசாத்திய திறனைக் கொண்டுள்ளனர். அவர்களின் ஆழ்ந்த உள்ளுணர்வு மற்றும் ஆபத்தை சந்திக்கும் அச்சமற்ற அணுகுமுறை அவர்களை வணிகம், முதலீடு அல்லது தொழில்முனைவோர் ஆகியவற்றில் வலிமையானவர்களாக மாற்றுகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதிலிருந்து ஒருபோதும் இருந்து பின்வாங்க மாட்டார்கள், மேலும் எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் இருந்தும் அவர்கள் வெளிவந்து விடுவார்கள். வெற்றி பெறுவதற்கான அவர்களின் ஆர்வமானது ஒப்பிடமுடியாதது, மேலும் அவர்கள் செல்வந்தர்களாக மாறுவதற்கான பயணத்தைத் தொடங்கிவிட்டால், அதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்.
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமானவர்கள், அதேசமயம் தங்களுக்கான சொந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் விஷயத்தில் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். அவர்களின் தன்னம்பிக்கையும், கவர்ச்சியும் மற்றவர்கள் கனவு காணக்கூடிய விஷயங்களை எளிதாக அடைய உதவும். அவர்கள் ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைவருக்குரிய குணத்துடன் பிறந்தவர்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் தைரியம் மற்றும் வசீகரத்தால் இலாபகரமான வாய்ப்புகளை ஈர்க்கிறார்கள்.
அவர்கள் பொழுதுபோக்கு துறையில் இருந்தாலும், தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு சென்றாலும் அல்லது தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினாலும், அவர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்தி அவற்றை பணமாக மாற்றுவது எப்படி என்பதை நன்கு அறிவார்கள். அவர்கள் தங்களின் வளர்ச்சி மட்டுமின்றி தங்களை சார்ந்தவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதனாலதான் அவர்கள் சிறந்த தலைவர்காளக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












