Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கென சொந்த குணாதிசயங்கள் உள்ளன. சில நட்சத்திரங்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், சில நட்சத்திரக்காரர்கள் தாராள மனம் கொண்டவர்களாக இருப்பார்கள், அதேபோல குபேர யோகத்துடன் கூடிய நட்சத்திரங்களும் உள்ளன.
பிறந்தது முதலே அதிர்ஷ்டத்தால் எளிதில் பணக்காரராகும் வாய்ப்பு சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.அவர்கள் விரும்பிய வேலையை அதிக சிரமமின்றி எளிதில் பெறுவார்கள். அவர்கள் வியாபாரம் தொடங்கினாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத அதிர்ஷ்டம் பெற்ற அந்த நட்சத்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்தது முதலே பொருளாதாரரீதியாக எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள். அவர்களால் எளிதில் நன்றாக சம்பாதிக்க முடியும். அவர்கள் இளம் வயதிலேயே வேலைக்கு சென்றுவிடுவார்கள். எளிதில் நல்ல சம்பளத்துடன் வேலையில் சேரலாம். இந்த நட்சத்திரக்காரர்கள் எங்கு சென்றாலும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் வியாபாரத்திலும் வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள்.
அஸ்வினி
பிறக்கும்போதே குபேர யோகத்துடன் பிறந்தவர்களில் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் முக்கியமானவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையிலும் கால் பதித்தாலும் வெற்றிபெறும் யோகம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக விரைவில் வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ளது. அவர்கள் விரைவிலேயே சொந்த காலில் நிற்க வாய்ப்புள்ளது, மிக இளம் வயதிலேயே நிதி லாபம் ஈட்ட முடியும். அவர்கள் பணத்தை சிறப்பாக சேமிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது போல ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குபேரனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குபேர யோகத்தில் பிறந்தவர்கள் என்பதால் வாழ்க்கையில் தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைவார்கள். வேலையில் அவர்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியும். அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்கும் யோகமும் உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஆடம்பரமான வாழ்க்கையைக் கொடுப்பார்கள்.
மகம்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்கள். அவர்கள் வளர வளர அவர்களின் அதிர்ஷ்டமும் அதிகமாகும். அவர்கள் விரும்பும் வழியில் எளிதில் பணம் சம்பாதிக்கும் யோகம் உள்ளவர்கள்ம் மேலும் படிப்பில் பெரிய கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். வியாபாரத்தில் அவர்கள் கொடிகட்டி பறப்பவர்களாக இருப்பார்கள்.
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மட்டுமின்றி திறமையுடன் பிறந்தவர்கள். அவர்கள் வேலையில் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். எனவே உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சம்பளத்துடன் மிக விரைவாக புதிய வேலைகளைப் பெறுவார்கள். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் தந்திரமும், தொலைநோக்கு திட்டங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் பெரிய தொழிலதிபராக வர வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
