இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களுக்கு மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்... இரக்கமே இல்லாதவர்களாம் இவங்க...!

மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் மறதிதான். ஏனெனில் மனிதர்களுக்கு மோசமான நினைவுகள் ஏற்படுத்தும் வலியை விட மோசமானது எதுவும் இல்லை. மனதில் நீண்ட காலமாக வெறுப்புகளை வைத்திருப்பது நல்லதல்ல, ஏனெனில் அது இறுதியில் உங்களை காயப்படுத்தவே செய்யும். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களையும், துரோகங்களையும் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த மாதம் மற்றும் ராசி அவர்களின் ஆளுமையை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு மன்னிப்பு குணம் அறவே இருக்காது. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் மற்றும் அதற்காக நிச்சயம் பழிவாங்குவார்கள். இது அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றும். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் மன்னிக்கும் குணமே இல்லாத ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

People Born On These Dates Are Never Forgive Anyone

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் இதயத்தில் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காது. அவர்கள் மிகவும் பிடிவாதமான மற்றும் உறுதியான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் கோபப்பட்டு ஒருவரின் கதவை மூடினால் அது நிரந்தரமாக மூடப்பட்டதாகும், அவர்கள் ஒருபோதும் இரண்டாம் வாய்ப்பைக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களின் தவறுகளை மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

அவர்களின் பழிவாங்கும் எண்ணம் ஒரு உணர்ச்சிபூர்வமான வெடிப்பு அல்ல, அவர்கள் பொறுத்திருந்து திட்டமிட்டு பழிவாங்குவார்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையை இழந்தால், அதை மீண்டும் பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எதிர்கால வலியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து தவறுகளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தீவிர உணர்ச்சியும், பழிவாங்கும் குணமும் கொண்ட மன்னிக்காத ஆன்மாக்களாக இருப்பார்கள். அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் பழிவாங்குவதில் பாம்பு போன்றவர்கள் என்று கருதப்படுபவர்கள், எனவே அவர்கள் ஒருபோதும் யாரையும் மன்னிக்கவே மாட்டார்கள்.

அவர்கள் வருடக்கணக்கில் வெறுப்புணர்வைத் தாங்கிக் கொண்டு பழிவாங்கத் திட்டமிடுவார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், விசுவாசமாகவும் இருப்பதால், அவர்களால் நேசிப்பவர்களின் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை யாராவது ஏமாற்றினாலோ அல்லது அவர்களுக்கு துரோகம் செய்தாலோ அவர்கள் எவ்வளவு பிடித்தவர்களாக இருந்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள், இரக்கமின்றி பழிவாங்குவார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மன்னிக்க முடியாத மன்னிக்கும் குணம் இல்லாத இரக்கமற்றவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் வெடிக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளனர், மற்றவர்களுடன் உரையாடவும், அவர்களின் காரணங்களைக் கேட்கவும் அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இந்த குணாதிசயங்கள் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் மன்னிப்பு பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் அமைதியடையும் வரை காத்திருந்து, மனக்கசப்பு குறையும் என்று நம்புவது நல்லது. ஆனால் பெரும்பாலும் அது சாத்தியமற்றது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion