Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் பஞ்சகிரஹி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
Panchgrahi Yog On 25 April 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்து ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.
கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, அவ்வப்போது யோகங்களும் உருவாகி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 25 ஆம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கிரகங்களின் அரிய சேர்க்கையால் மிகவும் அற்புதமான ஒரு யோகம் உருவாகவுள்ளது.

அதுவும் ஒன்று, இரண்டு கிரகங்கள் அல்ல, 5 கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இதனால் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த நிகழ்வானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் மீன ராசியில் சனி, புதன், ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.
இந்த 5 கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதே சமயம் இன்னும் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இப்போது மீன ராசியில் உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரஹி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். பணியிடத்தில் நிறைய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும்.
பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை தொடர்பான பெரிய முடிவுகளை எடுக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பொறுமையாக எதையும் செய்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கையும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கனவு நனவாகும்.
பெற்றோர், வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். வருமானத்தில் மிகப்பெரிய உயர்வைக் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நேர்மையாக செய்யும் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்புறவு கிடைக்கும். நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications