Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
Palmistry: கையில் உள்ள ரேகைகளும்... அவை ஒருவரைப் பற்றி கூறும் சுவாரஸ்யமான விஷயங்களும்...
Palmistry: எப்படி சாமுத்திரா சாஸ்திரத்தில், ஒருவரது முகம், மூக்கு, காது, கண்கள், கைகள், விரல்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரது குணாதியங்கள் கூறப்படுகிறதோ, அதேப் போல் ஒருவரது கைகளில் உள்ள ரேகைகளைக் கொண்டு, ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தலைவிதி, ஆரோககியம் ஆகியவற்றை கணித்து கூறும் ஜோதிடம் தான் கைரேகை ஜோதிடம். இந்த கைரேகை ஜோதிடமானது தற்கால ஜோதிட அடிப்படைகளில் ஒன்றாகும்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் கைரேகைகளும் தனித்துவமானது. அதனால் தான் ஒருவரது கையெழுத்திற்கு இணையாக கைரேகை கருதப்படுகிறது. நமது கைகளில் பலவிதமான கோடுகளை நாம் காணலாம். இந்த கோடுகளை ரேகைகள் என்று அழைப்பர்.

நீங்கள் உங்கள் கைகளில் உள்ள ரேகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஒவ்வொரு ரேகைகளும் ஒருவரைப் பற்றி எந்த மாதிரியான விஷயங்களை கூறுகின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே கையில் உள்ள ரேகைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழ்க்கை ரேகை
உள்ளங்கையில் உள்ள நன்கு அறியப்பட்ட ஒரு ரேகை தான் வாழ்க்கை ரேகை. இந்த ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே முடிவடையும். இந்த ரேகையானது ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை தெரிவிக்கிறது. வாழ்க்கை ரேகையானது ஒருவரது உயிர் மற்றும் ஆற்றல் நிலைகளை குறிக்கிறது. இந்த ரேகை எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் மன அழுத்தம் அல்லது பிரச்சனைகளையும் முன்னறிவிக்கும்.
இந்த வாழ்க்கை ரேகை ஒருவருக்கு நன்கு அடர்த்தியாக இருந்தால், அந்நபர் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுடன் இருப்பார். அதுவே மங்கலாக இருந்தால், அவர் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு, குறைவான ஆற்றலுடன் இருப்பார்.
2. இதய ரேகை
இதய ரேகை என்பது பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே தொடங்கி, கிடைமட்டமாக இருக்கும். இந்த இதய ரேகையை காதல் ரேகை என்றும் அழைப்பர். இந்த ரேகையானது ஒருவரின் வாழ்க்கையில் நெருக்கம் மற்றும் அன்பின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கிறது. இந்த ரேகையானது ஒருவரது உணர்ச்சிகளைப் பற்றிய முக்கியமான விஷயங்களை தெரியப்படுத்தும். அதாவது, நீங்கள் உங்கள் உணர்வுகளை எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள் மற்றும் காதல் முறிவை எவ்வளவு சிறப்பாக கையாள்வீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.
இந்த இதய ரேகை ஒருவருக்கு அடர்த்தியாக இருந்தால், அந்நபரின் உறுதித்தன்மையைக் குறிக்கிறது. அதுவே மங்கலாக இருந்தால், அது வெளிப்படையாக பேசாதவர் என்பதைக் குறிக்கிறது.
3. விதி ரேகை
ஒருவரது கையில் உள்ள ரேகைகளில் மிகவும் முக்கியமான ரேகை என்றால் அது விதி ரேகை. இந்த ரேகையானது உள்ளங்கையின் கீழ் பகுதியில் இருந்து நீண்டு மேல் நோக்கி செங்குத்தாக செல்லும். இந்த ரேகை வெற்றிகரமான தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கிறது.
இந்த ரேகை அடர்த்தியாக இருந்தால், அந்நபர் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார் என்பதை குறிக்கிறது. அதுவே மங்கலாக இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடுவதைக் குறிக்கிறது.
4. சூரிய ரேகை
இந்த சூரிய ரேகை அனைவரது கையிலும் தெரியாது. இந்த ரேகை திறமை, பிரபலம் மற்றும் சாதனைப் பற்றிய விஷயங்களை தெரியப்படுத்தும். மேலும் இந்த ரேகையானது உள்ளங்கையின் கீழ் பகுதியில் இருந்து நீண்டு மோதிர விரல் வரை செங்குத்தாக இருக்கும்.
நல்ல அடர்த்தியான சூரிய ரேகை வலுவான படைப்பாற்றலையும், அங்கீகாரத்தை பெறவிருப்பதையும் குறிக்கிறது. அதுவே மங்களான சூரிய ரேகையானது தங்கள் திறன்களில் நம்பிக்கையின்மையைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications