அக்டோபர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது.. உங்க ராசிக்கு எப்படி?

Finance Horoscope For October 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த அக்டோபர் மாத கிரகங்களின் நிலைகளால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்.

முக்கியமாக இந்த அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இப்போது 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலையும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

October Month Rasi Palan 2024 October 2024 Monthly Finance Horoscope For All Zodiac Signs In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பண விஷயத்தை எப்படி கையாள்வது என்பது நன்கு தெரியும். அதிக பணத்தை சம்பாதிக்கும் வழி பிறக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். ரியல் எஸ்டேட் விவகாரங்களில் அவசரப்படாமல் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கையாளும் புதிய வழி தெரியும். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். அதேப்போல் வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். அக்டோபர் 16-க்கு பின் ரியல் எஸ்டேட் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல பலனைத் தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நிதி ரீதியாக எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், சற்று யோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. யூகங்களால் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். இருப்பினும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தையில் போடும் முன் கவனமாக இருக்க வேண்டும். அக்டோபர் 19-க்கு பின் கடன் கொடுக்கவோ, வாக்குறுதிகளை கொடுக்கவோ வேண்டாம். இல்லாவிட்டால், அது உங்களுக்கு நிதி அழுத்தத்தை கொடுத்துவிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் கிடைக்கும். இதனால் உங்கள் கடன் அடைக்கப்படும். வாழ்க்கைத துணையால் சில பண பிரச்சனைகளை சந்திக்கலாம். சொத்துக்களை விற்க திட்டமிட்டால், நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதவீடுகளில் இருந்து இம்மாதத்தில் நல்ல வருமானம் இருக்கும். இதனால் பணப் பிரச்சனைகள் சற்று குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபரில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். உடன் பிறந்தவர்களின் உதவியால் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்ய நினைத்தால், ஏமாற்றப்படலாம். பணத்தை சற்று சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மாத இறுதியில் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எந்த சொத்துக்களையும் விற்கும் எண்ணம் இருந்தால், அதை கைவிடுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஒரு பெரிய செலவு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். உங்கள் சேமிப்பில் கையை வைத்து செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அக்டோபர் 17-க்கு பின் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பண வரவு இருக்கும். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கடன் அழுத்தம் குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் விவேகமான நிதி முடிவுகள் நீண்ட காலத்தில் நல்ல பலனைத் தரும். நல்ல லாபத்தைத் தரும் முதலீடுகளை செய்யும் வாய்ப்பு தேடி வரும். அதைப் பயன்படுத்திக் கொண்டால், நல்ல நிதி முன்னேற்றத்தைக் காணலாம். செலவுகள் அதிகரிப்பதால், எந்த கடன் கொடுப்பதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். சட்ட பிரச்சனைகளால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபரில் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். இருப்பினும் கடன் கொடுப்பதற்கு முன் யோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதிக்கு பின் செலவுகள் அதிகரிப்பதால், பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஊகங்களால் எந்த நிதி முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றமடைவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் நல்ல லாபத்தைத் தரும். அக்டோபர் 19க்கு பின் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைப் பெறுவார்கள். இது நல்ல பண வரவைக் கொண்டு வரும். பழைய கடன்கள் இம்மாதத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அக்டோபர் 12-க்கு பின் சொத்துக்களை விற்க நினைத்தால் நல்ல சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வியாபாரம் மூலம் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இம்மாதத்தில் பணம் தொடர்பான வாக்குறுதிகளை கொடுத்துவிடாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் பணத்தை வீணாக செலவழிப்பதைத் தவிர்க்க, இலக்குகளில் தெளிவாக இருங்கள். நம்பிக்கையின் அடிப்படையில் இம்மாதத்தில் யாருக்கேனும் கடன் கொடுத்தால், அந்த பணத்தை இழக்க நேரிடும். அக்டோபர் 12-க்கு பின் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அந்த பணத்தை திருப்பி செலுத்துவது கடினமாக இருக்கும் மற்றும் அது மிகுந்த நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட்டில் பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன், ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு சிந்திக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் முதலீடுகளில் இறங்கும் முன் அனுபவசாலிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த நிதி முடிவுகளையும் இம்மாதத்தில் எடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். அக்டோபர் 19-க்கு பின் அதிக செலவு செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 4, 2024, 14:00 [IST]
Desktop Bottom Promotion