Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
அக்டோபர் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது.. உஷாரா இருங்க...
October 2025 Unlucky Zodiac Signs: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் மாற்றங்களைக் காண்பார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.
அதுவும் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன், குரு போன்ற கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. அதோடு இந்த கிரகங்கள் நிலைகளாலும், சேர்க்கையின் மூலமும் பல யோகங்களை உருவாக்கவுள்ளன. இப்படியான யோகங்களினாலும், கிரக பெயர்ச்சிகளாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்.

இப்போது அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக, பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
அக்டோபர் மாதத்தில் செவ்வாய் விருச்சிக ராசியில் நுழைவதால், இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் உங்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி, உங்கள் பெற்றோரின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். இம்மாதத்தில் திருமணமானவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளால் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். இருப்பினும், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு சுமாராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் மன கவலைகள் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அப்படி பயணங்களை மேற்கொள்ளும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடைமைகளை இழக்க நேரிமும். சுக்கிரன் மோசமான நிலையில் இருப்பதால், எந்த வேலையை செய்தாலும் அல்லது எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து செய்ய வேண்டும். எதிரிகள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்வதால், நிதி இழப்புக்களை சந்திக்க நேரிமும். மேலும் இம்மாதத்தில் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனதை புண்படுத்தும் சம்பவங்கள் நிறைய நடக்கும். ஆயினும், வணிகர்களுக்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு இருந்தால், அது நிறைவேறும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும், செல்வமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
