நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் ஆண்களின் கனவு தேவதைகளாக இருப்பார்களாம்...உங்க பிறந்த தேதி என்ன?

Numerology: அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்குமென்பதுதான் எல்லோரின் கனவாக இருக்கும், ஆனால் அது பெரும்பாலான நபர்களுக்கு கனவாகவேதான் இருக்கிறது. வெகுசிலர் மட்டுமே பெரிய முயற்சிகள் எதுவுமே இல்லாமல் எளிதில் மற்றவர்களை ஈர்க்கும் வசீகரத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பதுடன் அவர்கள் தங்களுடன் இருக்க வேண்டுமென்று ஏங்குபவர்களாக இருப்பார்கள்.

சிலருக்கு இயற்கையாகவே காந்தத்தன்மை மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் மறுக்க வசீகரம் இருக்கும். சுவாரஸ்யமாக உங்கள் பிறந்த தேதிக்கும், உங்களின் இந்த வசீகர குணத்திற்கும் தொடர்பு உள்ளது நியூமராலஜி கூறுகிறது.

Numerology Women Born On These Dates Are Highly Attractive in Tamil

பெண்கள் இயல்பாகவே வசீகரமானவர்கள், அதிலும் சில தேதிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட அதிக வசீகரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் வசீகரம், புத்திசாலித்தனம் மற்றும் ஆர்வத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள்

அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு துடிப்பான ஆளுமைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.இந்த தேதிகளில் இயல்பாகவே ரசிக்கும் படி பேசக் கூடியவர்கள், எளிதில் பழகும் இயல்புடையவர்கள், இதனால் அனைவருக்கும் அவர்கள் பிடித்தவர்களாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதில் சிறந்தவர்கள், பெரும்பாலும் அவர்கள் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதன் அனைவரின் கவனத்தின் மையமாக மாறுகிறார்கள். இவர்களின் அரவணைப்பும் வெளிப்படைத்தன்மையும் மக்களை இவர்களை நோக்கி ஈர்க்கின்றன, இதனால் அவர்கள் தங்கள் வட்டாரங்களில் விரும்பத்தக்கவராக மாறுகிறார்கள்.

5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள்

5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் விழாக்களின் முக்கிய அம்சமாக இருப்பார்கள், மேலும் மற்றவர்களால் புறக்கணிக்க முடியாத சாகச மனப்பான்மையுடன் இருப்பார்கள்.

அவர்கள் எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்கவும், புதிய மக்களைச் சந்திக்கவும், புதிய இடங்களை ஆராயவும் தயாராக இருப்பார்கள். அவர்களின் தைரியமும், தன்னிச்சையான தன்மையும் அவர்களை அனைத்து இடங்களிலும் தனித்து நிற்கச் செய்கின்றன, மேலும் அவர்களின் அளவில்லாத ஆற்றல் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள்

7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள் கவனத்தை ஈர்க்க விரும்பாதவர்களாக இருக்கலாம், ஆனால் அதுவே அவர்களைத் தேடிவரும். இந்த தேதிகளில் பிறந்த பெண்களிடம் ஒரு மர்மமான வசீகரம் இருக்கிறது, அது மற்றவர்களை கவர்ந்திழுக்கும்.

அவர்கள் தங்கள் வயதுக்கு மீறிய அனுபவங்களைப் பெறும் ஞானமுள்ளவர்களாகவும், பெரும்பாலும் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் அமைதியான தன்னம்பிக்கையும், சிந்தனையும் அனைவரையும் வசீகரிக்கும், அவர்களை ஒருமுறை சந்தித்தவர்கள் கூட அவர்களை எப்போதும் மறக்க மாட்டார்கள்.

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் கவர்ச்சி, சாகச மனப்பான்மை அல்லது புத்திசாலித்தனம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்ப்பதை உறுதி செய்கிறார்கள். கவனத்தை ஈர்க்கும் அவர்களின் திறன் வெறும் உடல் தோற்றம் சார்ந்தது மட்டுமல்ல, அவர்களின் ஆளுமையம் அவர்களை தனித்துவமானவர்களாக மாற்றுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, January 10, 2025, 20:48 [IST]
Desktop Bottom Promotion