Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நீங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? நீங்க எந்த வழியில் கோடீஸ்வரர் ஆவீங்கனு நாங்க சொல்றோம்...!
Numerology: ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் ராசியை பற்றி ஆராயும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அதேசமயம் நம்முடைய பிறந்த தேதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நியூமராலஜி படி உங்கள் பிறந்த தேதி வெறும் எண் அல்ல, அது செல்வத்திற்கான பாதையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பிரபஞ்ச குறியீடு.
எண் கணிதத்தின் படி பிறந்த தேதியின் ஆற்றலின் அடிப்படையில் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பது நிதிரீதியான வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது. ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் உள்ள அதன் தனித்துவமான செல்வத்தை உருவாக்கும் திறன் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் தலைவர்கள்
சூரியனால் ஆளப்படும் இவர்கள் அதிகாரம் செலுத்தும் பதவிகளில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழில்முனைவோர், தலைமைப் பதவிகள் அல்லது புதுமையான திட்டங்கள் செல்வத்தைத் தருகின்றன. அவர்களின் நம்பிக்கையும், உறுதியும் அவர்களை தனித்து நிற்க உறுதி செய்கின்றன, எனவே புதிய முயற்சிகளில் தைரியமாக முதலீடு செய்வது அவர்களுக்கு பலனைக் கொடுக்கும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் ராஜதந்திரிகள்
சந்திரனால் ஆளப்படும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கூட்டு வியாபாரம் மற்றும் படைப்புத் துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் வெற்றி ஒத்துழைப்பு, உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு ஆகியவற்றிலிருந்து வருகிறது. விருந்தோம்பல், கலைகள் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தேவையான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் தொலைநோக்கு பார்வையாளர்கள்
குரு பகவானின் பரந்த ஆற்றலுடன், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கற்பித்தல், ஊக்கமளித்தல் மற்றும் ரிஸ்க் உள்ள துறைகளில் எளிதில் வளர்ச்சி அடைகிறார்கள். முதலீடுகள் மற்றும் கல்வி, நிதி அல்லது பேச்சு சார்ந்த துறையில் ஆகியவற்றில் அவர்கள் விரைவில் செல்வந்தராவார்கள்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் கட்டுமான கலைஞர்கள்
சனி கிரகத்தால் ஆளப்படும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முறையான அணுகுமுறைகளில் வெற்றியைக் காண்கிறார்கள். கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திட்டமிடல் மூலம் அவர்களின் செல்வம் சீராக முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் போன்றவை அவர்களுக்கு லாபகரமான துறைகளாக இருக்கும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த தொடர்பாளர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்திக்கூர்மையின் கிரகமான புதன் விரைவான சிந்தனையையும், தகவமைப்புத் திறனையும் தருகிறது. இவர்கள் ஊடகம், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைத் துறையில் சிறந்து விளங்குகிறார்கள். ட்ரெண்டுகளை கண்டறிவதில் அவர்களின் திறமை, செல்வத்தைக் குவிப்பதில் அவர்கள் எப்போதும் ஒரு படி மேலே இருப்பதை உறுதி செய்கிறது.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் ஃபேஷன் கலைஞர்கள்
சுக்கிரன் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வசீகரத்தையும், அழகுக்கான ஆர்வத்தையும் அளிக்கிறார், இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஃபேஷன், கலை மற்றும் ஆடம்பரத் தொழில்கள் மூலம் செல்வத்திற்கான இயற்கையான காந்தங்களாக மாறுகிறார்கள். உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்கும் அவர்களின் திறனும் லாபகரமான ஒப்பந்தங்களை முடிக்க உதவுகிறது.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள்
கேதுவின் ஆன்மீக ஆற்றல் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சக்திவாய்ந்த உள்ளுணர்வை அளிக்கிது, அந்த உணர்வு அவர்களை வழிநடத்துகிறது. அவர்களின் நிதி வெற்றி பெரும்பாலும் ஆராய்ச்சி, மெட்டாபிசிக்ஸ் அல்லது ஆன்மீகம் போன்ற வழக்கத்திற்கு மாறான துறைகளிலிருந்து வருகிறது. அவர்கள் உள்ளுணர்வை நம்பி தங்களுக்கு பிடித்தத் துறைகளில் மூழ்கி செல்வத்தை ஈர்க்கிறார்கள்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் அதிகார மையமாக இருப்பார்கள்
சனியின் ஒழுக்கம் மற்றும் மீள்தன்மையுடன், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நீண்ட கால முதலீடுகள் மற்றும் அதிக பங்குகள் கொண்ட முயற்சிகள் மூலம் செல்வத்தை ஈர்க்கிறார்கள். வங்கி, நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவை அவர்களுக்கு சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும் துறைகளாக இருக்கும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் போராளிகள்
செவ்வாய் கிரகம் லட்சியத்தையும் உந்துதலையும் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கொண்டுவருகிறது. இவர்கள் விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவு போன்ற போட்டித் துறைகளில் செழித்து வளர்கிறார்கள். அவர்களின் வலிமையான மனஉறுதி அவர்களை புத்திசாலித்தனமாக வழிநடத்தி பொருளாதார வெற்றியை உறுதி செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
