Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும்
நவபஞ்சம ராஜயோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகிற 5 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் தொடர்ந்து கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது, இதனால் சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 8 ஆம் தேதி செவ்வாயின் கிரக பெயர்ச்சியால் சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகப் போகிறது.
கிரகங்கள் உருவாக்கும் ராஜயோகங்களிலேயே இதுதான் மிகவும் சக்திவாய்ந்த ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அடையப்போகிறார்கள். செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் நவபஞ்ச ராஜயோகத்தின் பலன்கள், சில ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு பலன்களை அளிக்கின்றன.
இந்த காலகட்டத்தில் செவ்வாய் துலாம் ராசியில் நுழைகிறார், அது சுக்கிரன் ஆளும் ராசி என்பதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த பதிவில் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் 8 முதல் 14 வரை செவ்வாய் நவபஞ்ச ராஜ யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையிருக்கும். அவர்கள் எல்லாவற்றையும் உற்சாகத்துடன், நம்பிக்கையுடனும் செய்ய முடியும். அவர்கள் அனைத்து விஷயங்களையும் பொறுமையாக கையாண்டு அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அவர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்யும் முதலீடுகள் அவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. இது அவர்கள் வாழ்க்கையின் சிறந்த காலகட்டமாக இருக்கும். அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் பல மகிழ்ச்சியான மாற்றங்களையும் அனுபவிப்பார்கள். பல்வேறு வழிகளிலிருந்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்கலாம். பல எதிர்பாராத மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். அலுவல சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நவபஞ்சம யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்காத உயரங்களை அடையலாம். வேலையில் இருப்பவர்கள் இப்போது சிறப்பான நன்மைகளை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டம் அவர்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த காலகட்டமாக இருக்கும். அவர்களின் மனவலிமை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் நினைத்ததை விட பெரிய லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வி விஷயங்களில் சிறந்த மாற்றங்களை அடையலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம் பல்வேறு நன்மைகளை உறுதி செய்கிறது. இந்த யோகம் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நேர்மறையான மாற்றங்களையும் அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் செய்யும் பயணங்கள் வேலையிலும், வியாபாரத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும். நிதி நிலைமைக்கு ஏற்ப மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பும் கிடைக்கும்.
கும்பம்
செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்து அதில் வெற்றிகரமான முடிவுகளை பெற முடியும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும் மற்றும் வாழ்க்கையில் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும். நவபஞ்ச ராஜ யோகம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

