Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சந்திரன் உருவாக்கும் சித்தி யோகத்தால் தடைகளை உடைத்து வெற்றியை அடையப்போகும் 4 ராசிக்காரங்க இவங்கதான்...!
நவ கிரகங்களில் சந்திரனும் மிகவும் முக்கியமான ஒரு கிரகமாகும். தற்போது சந்திரன் கும்ப ராசிக்குச் செல்கிறார். சனிபகவான் ஆளும் ராசியான கும்பத்தில் சந்திரன் நுழைவதால், இந்த நாளில் சித்தி யோகம் உருவாகிறது. சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த யோகத்தினால் பண பலன்கள் உண்டாகும்.
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். இதேபோல், இந்த ராசிக்காரர்கள் அவர்கள் நினைக்கும் அனைத்தையும் சாதிக்கக் கூடிய யோகம் கிடைக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சித்தி யோகத்தால் நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சித்தி யோகத்தால் நற்பலன்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் புதிய வேலையைக் கண்டுபிடிக்க முடியும், அதேபோல் அவர்களின் தற்போதைய வேலையை மாற்றவும் முடியும். வேலை செய்யுமிடத்தில் அதிகாரிகளின் உதவியையும், ஆதரவையும் பெறலாம். இதுதவிர அவர்களின் துறையில், பல சாதனைகளை செய்ய முடியும்.
பொருளாதாரரீதியாக அவர்கள் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். அவசர முடிவுகளை எடுக்காமல் கவனமாக இருங்கள். ஏனெனில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறுகளுக்கு வழிவகுக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்க கவனமாக இருங்கள். அதேபோல, சிறிய லாபம் தரும் திட்டங்களில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் மேலாதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறலாம். இருப்பினும், அலுவலகத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் உங்களை பாதிக்கலாம் மற்றும் மன அழுத்தத்தில் தள்ளலாம். இருப்பினும், அவர்கள் முழுநம்பிக்கையுடன் அதிலிருந்து வெளிவரலாம்.
ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் மற்றும் வியாபாரத்தில் சிறு ஆதாயங்களைப் பெறலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சித்தி யோகம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள் திருப்திகரமான லாபத்தை எதிர்பார்க்கலாம். சமூகத் துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் திருப்தி அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக சிந்திக்கவும்.
இந்த ராசிக்காரர்கள் விரும்பியதை அடைவதில் சிறந்து விளங்குவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். உங்கள் வேலையை அழிக்க எதிரிகள் முயற்சி செய்யலாம், ஆனால் உங்களின் கை ஓங்கி இருக்கும்.
விருச்சிகம்
சித்தி யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பல அங்கீகாரங்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வுக்கான அதிர்ஷ்டம் இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்கலாம். வியாபாரத்திற்காக நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். பணி நிமித்தமாக பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். கடன் வாங்காமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

