84 ஆண்டுகளுக்கு பின் ஆண்டு இறுதியில் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்கு புத்தாண்டு சிறப்பா இருக்கும்..

Mercury Uranus Make Sadashtak Yog 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் ஒரு ராசியில் 15 நாட்கள் வரை மட்டுமே இருப்பார். குறுகிய காலத்தில் புதன் ராசியை மாற்றக்கூடியவர் என்பதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

அந்த வகையில் தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் புதன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் புதன் இருந்து, ரிஷப ராசியில் உள்ள யுரேனஸ் உடன் சேர்ந்து மிகவும் சக்தி வாய்ந்த யோகமான ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளார்.

Mercury Uranus Make Sadashtak Yog On 31 December 2025 Lucky Zodiac Signs

புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைத் தருவதாக மற்றும் நல்ல நிதி ஆதாயங்களைத் தரப்போகிறது. இப்போது புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். புதிய தொழியைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பயணங்களால் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். நிறைய செல்வத்தைக் குவிக்க முடியும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

கும்பம்

புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கும்ப ராசிகிகாரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல வெற்றியைக் காண்வதோடு, லாபத்தையும் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேஷம்

புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்ற பாதைகள் திறக்கப்படலாம். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாழ்க்கையின் மகிழ்ச்சி பெருகும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, December 5, 2025, 17:39 [IST]
Desktop Bottom Promotion