Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
புதன் பெயர்ச்சியால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் உச்சத்தை அடையப்போறாங்க..
Mercury Transit In Scorpio On 24 October 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியுமாவார்.
இப்படிப்பட்ட புதன் அக்டோபர் மாதத்தில் 2 முறை ராசியை மாற்றுகிறார். அதில் மாதத்தின் தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயின் ராசிக்குள் புதன் செல்லவுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியானது தீபாவளிக்கு பின் நிகழவுள்ளது.

இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காணவுள்ளனர். அதுவும் தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். அதோடு நிதி நிலையிலும் நல்ல உயர்வைக் காணக்கூடும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடையேயான உறவு இனிமையாக இருக்கும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு, எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். தந்தையுடனான உறவு மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசைகளும் நிறைவேறும். புதனின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications