Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
டிசம்பரில் 5 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Mercury Transit Five Times In December 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாவார். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் புதன் 5 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதுவும் விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் மட்டுமின்றி, அனுசம், கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி அடைந்து பயணிக்கவுள்ளார்.

அதில் டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும், டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசிக்கும் புதன் செல்லவுள்ளார். அதே சமயம் டிசம்பர் 10 ஆம் தேதி அனுசம் நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 20 ஆம் தேதி கேட்டை நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 29 ஆம் தேதி மூலம் நட்சத்திரத்திற்கும் செல்லவிருக்கிறார். புதனின் இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் வாழ்விலும் தெரியும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சிகளால் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதோடு நல்ல நிதி நன்மைகளையும் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது டிசம்பரில் 5 முறை நடக்கும் புதன் பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
டிசம்பரில் நடக்கும் புதன் பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
டிசம்பரில் நடக்கும் புதன் பெயர்ச்சிகளால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். அறிவாற்றல் மேம்படும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் ஒரு புதிய சாதனையைப் படைப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகள் வலுபெறும்.
துலாம்
டிசம்பரில் நடக்கும் புதன் பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புக்களும், நேர்மறையான மாற்றங்களையும் காண்பீர்கள். தொழில் ரீதியாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications