Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாக்குவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுதாம்...!
வேத ஜோதிடத்தில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மிகவும் முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் பஞ்சமஹாபுராஷ ராஜயோகம் இருந்தால் அவர் வாழ்க்கையில் சகலவிதமான சுகங்களையும் அடையக்கூடியவராக இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செப்டம்பர் 23-ல் புதன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதனால் பத்ர மகாபுருஷ ராஜயோகம் உருவாகும்.
இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்குமென்றாலும், ஆனால் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சகல ஐஸ்வர்யங்களையும் அனுபவிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவதோடு தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அடைவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
பத்ர மகாபுருஷ ராஜயோகம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராசியின் பணம் மற்றும் பேச்சு தொடர்பான அம்சத்தில் புதன் இருக்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண ஆதாயங்கள் உண்டாகும். மேலும் அவர்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும் மற்றும் அவர்களின் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
இந்த மாதம் தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிறந்த பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மார்க்கெட்டிங், வங்கி மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பத்ர மகாபுருஷ ராஜயோகம் சாதகமாக இருக்கும். புதன் அவர்களின் ஜாதகத்தில் கர்ம பாவத்தில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நிதி ஆதாயம் பெறுவார்கள். மேலும் வேலையில் அதிக திருப்தியை உணருவார்கள்.
இலக்குகள் இந்த காலகட்டத்தில் விரைவாக நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளுக்கும் கீழ் பணிபுரிபவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரலாம். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட லாபம் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பத்ர மகாபுருஷ ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். புதன் அவர்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் இது அவர்களின் வெற்றிக்கான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் ஆடம்பர பொருள் வசதிகளைப் பெறுவார்கள். வாழ்வில் வசதிகள் பெருகும்.
நீண்ட நாட்களாக நினைத்திருந்த பல பணிகள் முடியும். பொருளாதார நிலை மேம்படும். வாகனம், சொத்து வாங்க விரும்புபவர்கள் இந்தக் காலத்தில் வாங்கலாம். திருமண வாழக்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

