Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சனி-புதன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்...!
2025 இன்னும் ஒரு நாளில் முடியப்போகிறது. ஆண்டின் இறுதியில் பல சக்தி வாய்ந்த கிரகம் மாற்றங்கள் உருவாகிறது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி சனி மற்றும் புதன் கிரகங்கள் இணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அபரிமிதமான வளர்ச்சியை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகம் சுப பலன்களை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் உங்களின் தொழில் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். பணியிடத்தில் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத உயரங்களை அடைய வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலையும், சேமிப்பும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது, நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் தேடிவரும். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இப்போது மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
கன்னி
கேந்திர திருஷ்டி யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கபோகிறது. உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் வெற்றிகரமாக அமையும். உங்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் சிறந்த பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதிநிலையில் திடீர் உயர்வை அனுபவிக்கலாம். அலுவலகச் சூழல் உங்களுக்கு சாதகமானதாக மாறும், இதனால் எதிர்காலத்திற்கான சில பயனுள்ள திட்டங்களை உருவாக்கலாம்.
இந்த காலத்தில் உங்கள் வசீகரம் அதிகரிக்கும், உங்களைத் தேடி காதல் அழைப்புகள் வரலாம். நிதிநிலையுடன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த காலகட்டத்தில் பல சாதகமான மாற்றங்கள் வரப்போகிறது. எனவே ஆண்டின் இறுதி உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த கேந்திர திருஷ்டி யோகத்தால் வருமானம் அதிகரிக்கும். உங்களின் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் வாய்ப்புள்ளது. வேலையில் உள்ள அனைத்து தடைகளும் இப்போது முடிவுக்கு வரும், மேலும் நீங்கள் அலுவலகத்தில் புதிய உயரங்களை அடையலாம். வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டலாம் மற்றும் புதிய வியாபாரத்தில் பங்கேற்கலாம்.
பண வரவு அதிகரித்து பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரிதும் பயனடையலாம். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும், மேலும் உங்கள் துணையின் ஆதரவுடன் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். சரியான அணுகுமுறை மூலம், நீங்கள் இந்த காலகட்டத்தில் அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெறலாம்.
மீனம்
இந்த யோகம் மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் உருவாகப்போகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய வேலையில் சேரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
