Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் உதயமாவதால் உருவாகும் பத்ர ராஜயோகம்: ஜூன் 27 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mercury Rise In Gemini Make Badra Rajyog: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவற்றில் சில கிரகங்கள் அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஜூன் 14 ஆம் தேதி தான் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார். அதுவும் அஸ்தமன நிலையில் நுழைந்தார். இந்நிலையில் புதன் ஜூன் 27 ஆம் தேதி மிதுன ராசியில் உதயமாகவுள்ளார்.

இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகமானது ஆளுமையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதோடு பண வரவு அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ரா ராஜயோகமானது அதிர்ஷ்டமாக இருக்கும். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றிகளும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த புதன் உதயத்திற்கு பின் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்ரா ராஜயோகமானது சாதகமான பலன்களை அளிக்கும். முக்கியமாக எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். நிதி நிலை மேம்படும். வீட்டு செலவுகள் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மீடியா, மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு இந்த யோக காலமானது பண வரவை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
