கடக ராசியில் உதயமாகும் புதன்: ஆகஸ்ட்-ல இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகுது!

Mercury Rise In Cancer On August 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை, நட்சத்திரத்தை மாற்றுவது மட்டுமின்றி, அவற்றுள் சில கிரகங்கள் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்கின்றன. இவ்வாறு கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஆகஸ்ட் 09 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார்.

Mercury Rise In Cancer On August 2025 These Zodiac Signs Will Be Lucky

புதன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. மேலும் புதனின் அருளால் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, வருமானத்தில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் போகிறது. இப்போது புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்பட்டு, வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். ஆளுமை மேம்படும். தலைமைத்துவ திறன் மேம்படும். படைப்புத்திறன்கள் மேம்படும். இதன் மூலம் பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். முக்கியமாக புதனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, July 24, 2025, 22:44 [IST]
Desktop Bottom Promotion