Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஆண்டின் இறுதியில் புதன் உருவாக்கும் சிறப்பு யோகம்: 17 ஆண்டுகளுக்கு பின் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Dashank Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் புதன். இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் இந்த புதன் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பம் 29 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி புதன் யமனுடன் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது புதனும் யமனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரி இடைவெளியில் இருப்பார்கள். முக்கியமாக இந்த யோகத்தின் போது யமன் சனி பகவானின் மகர ராசியில் இருப்பார்.

இப்படி புதன் மற்றும் யமனால் உருவாகும் தசாங்க யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பிரகாசிக்கப்போகிறது. இப்போது புதன், யமனால் உருவாகும் தசாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தசாங்க யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இறுதி சிறப்பாக இருக்கும். முக்கியமாக இதன் விளைவு 2026 புத்தாண்டிலும் தெரியும். புதனின் அருளால் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பல துறைகளில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆளுமை மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல ஆண்டுகளாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
தசாங்க யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். குறிப்பாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். தேவையற்ற செலவுகள் குறையும். முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவார்கள்.
மிதுனம்
தசாங்க யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பார்கள். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஊடகம், எழுத்து, மார்கெட்டிங், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications