Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
May 2025 Horoscope: மே மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
May 2025 Horoscope: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும். அவ்வாறு மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் சில கிரகங்களின் ராசி மாற்றங்கள் நடக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்திலும் சில முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. அதுவும் சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு மற்றும் கேது ஆகிய 6 கிரகங்களும் மே மாதத்தில் தனது இயக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அதில் மே 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.

அதேப் போல் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மே 06 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். அடுத்து அசுரர்களின் குருவான சுக்கிரன் மே 31 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார்.
முக்கியமாக இந்த மே மாதத்தில் இரண்டு முக்கியமான கிரக பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. அவை குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சியாகும். இதில் ராகு மற்றும் கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லவுள்ளனர்.
இப்படி மே மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடப்பதால், இந்த மாதம் 5 ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். இப்போது 2025 மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மே மாதத்தில் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். அதுவும் இந்த மாதத்தில் நிதி நன்மைகள் மற்றும் முன்னேற்றத்தைப் பெறுவதோடு, செல்வம் மற்றும் சொத்துக்களின் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இம்மாதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டு முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்: மே மாதத்தில் சிறப்பான பலனைப் பெற, சூரிய பகவானுக்கு தினமும் நீரை அர்ப்பணித்து, சூரிய பகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள். இதனால் வெற்றிகள் குவியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாத கிரக நிலைகளால் உங்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்துடன், முன்னேற்றத்தையும் காண்பார்கள். இம்மாதத்தில் உங்கள் வசதிக்காக நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், உங்களுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக மிகவும் வலுவான நிலையில் இருப்பீர்கள். வருமான ஆதாரங்கள் கணிசமாக அதிகரிக்கும்.
பரிகாரம்: மே மாதத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் பெருக இம்மாதம் அனுமனை வழிபட்டு வாருங்கள். அதுவும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மே மாத கிரக பெயர்ச்சிகளால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மே 2025 தொடக்கத்தில் இருந்து சூரியன் அதிர்ஷ்ட வீட்டில் இருப்பதால், வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் நல்ல நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். சில நல்ல வேலைகளுக்கு பணம் செலவிடப்படும். இருப்பினும், சனியின் தாக்கத்தால் செலவுகள் அதிகமாக இருக்கலாம், எனவே, சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக செலவு செய்ய வேண்டும்.
பரிகாரம்: சிம்ம ராசிக்காரர்கள் மே மாதம் முழுவதும் அதிர்ஷ்டமாக இருக்க 'சுந்தரகாண்டம்' பாராயணம் செய்யுங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு சிவப்பு பயறு தானம் செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மே மாத கிரக நிலைகளால் இந்த மாதத்தில் நல்ல செய்திகளை அதிகம் பெறுவீர்கள். இம்மாதத்தில் தொழிலதிபர்களின் அதிர்ஷ்டமும் மாறும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். இருந்தாலும், உங்கள் ராசியில் குருவின் மோசமான பார்வை விழுவதால், வருமானம் சாதாரணமாகவே இருக்கும். உங்களுக்கு செலவுகள் இருக்கும், ஆனால் அது உங்கள் நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
பரிகாரம்: துலாம் ராசிக்காரர்கள் மே மாதத்தில் நல்ல பலனைப் பெற, மாதம் முழுவதும் அனுமன் சாலிசாவை சொல்லுங்கள். மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களையும் தானம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாத கிரக பெயர்ச்சிகளால் உங்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் நான்காவது வீட்டில் உச்சம் பெறுவதால், பல்வேறு துறைகளில் நிதி ஆதாயங்கள் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதம் உங்கள் கடின உழைப்பின் பலனை உங்கள் தொழிலில் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சில நல்ல நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
பரிகாரம்: மகர ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களுக்கு சிவப்பு நிற ஆடைகள், செம்பு போன்ற சூரியனுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











