Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
நாளை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது..
Mars Transit In Scorpio On 27 October 2025: ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இதனால் தான் ஒவ்வொரு கிரகங்களின் ராசி மாற்றங்களின் போதும் ஒருவரது வாழ்வின் ஏதாவது ஒரு அம்சங்களில் அதன் தாக்கம் தெரிகிறது. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இந்த செவ்வாய் லட்சியம், ஆர்வம், விடாமுயற்சியையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.

இந்த ராசியில் டிசம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். முக்கியமாக செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழைந்திருப்பதால், ஐந்து மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ருச்சக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது.
செவ்வாய் தனது சொந்த ராசிக்கு செல்வதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது விருச்சிகம் செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியால் 6 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் டிசம்பர் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. மன தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். எந்த வேலையை எடுத்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் எதிரிகளை அசால்ட்டாக தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் ஆசியால் டிசம்பர் வரை யாராலும் இந்த ராசிக்காரர்களை வீழ்த்த முடியாது.
கடகம்
கடக ராசியின் 10 மற்றும் 5 ஆவது வீடுகளின் அதிபதியான செவ்வாய் 5 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இந்த ஐந்தாவது வீடு அறிவு, கல்வி, காதல் மற்றும் குழந்தை மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், 4 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இந்த வீடு தாய், வீடு, வாகனம் மற்றும் சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. இதனால் இந்த பெயர்ச்சியானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயாருடனான உறவு நன்றாக இருக்கும். மேலும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியால் முதல் வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். உங்களின் தன்னம்பிக்கையும், கௌரவமும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications