Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் அசைக்க முடியாது..
Mars Transit In Scorpio On 27 October 2025: ஜோதிடத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் துணிச்சல், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியும் கூட. செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
தற்போது செவ்வாய் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் டிசம்பர் வரை இருப்பார். விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்வது சற்று சிறப்பானது. இந்த ராசிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாயின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். அதுவும் எதிர்பாராத அளவில் செல்வமும், சொத்துக்களும் குவியப் போகின்றன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்தும் நல்ல பலனைப் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீட்டின் அதிபதியான செவ்வாய், 4 ஆவது வீட்டில் இருப்பதால், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
அதோடு தொழில் ரீதியான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் தன்னம்பிக்கை, தைரியம், வலிமை நிறைந்து இருப்பதால், தங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதனால் சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல பலனைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். புதிய சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
