Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
18 மாதங்கள் கழித்து தனுசு செல்லும் செவ்வாய்: டிசம்பரில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Mars Transit In Sagittarius 07 December 2025: ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். நவகிரகங்களில் செவ்வாய் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் நட்புறவைக் கொண்டுள்ளார். இந்த செவ்வாய் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் தொடக்கத்தில் செவ்வாய் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். செவ்வாய் குருபகவானின் ராசிக்கு சுமார் 18 மாதங்கள் கழித்து செல்லவுள்ளார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சற்று சிறப்பானது. தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதோடு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது செவ்வாய் தனுசு ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் கடினமான சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பார்கள். வெற்றிகள் குவியும். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
