Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
துலாம் ராசிக்கு செல்லும் செவ்வாய்: செப்டம்பர் 15 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படபோகுது..
Mars Transit In Libra On 15 September 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், சகோதரர், ஆற்றல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதியும் கூட. இந்த செவ்வாயின் உச்ச ராசி மகரம். அதே வேளையில் அதன் பலவீனமான ராசி கடகமாகும்.
இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். தற்போது செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி செவ்வாய் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். செவ்வாயின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக வருமானத்தில் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. அதோடு நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்போது துலாம் ராசிக்கு செல்லும் செவ்வாயால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணம் தேடி வரும். மேலும் சிக்கிய பணமும் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதன் விளைவாக உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் தைரியம், வீரம், துணிச்சல் போன்றவை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். இதனால் எந்த வேலையையும் துணிந்து தைரியமாக செய்வீர்கள்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சிக்கு பின் பணியிடத்தில் தங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் தீவிரமாக இருப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் நிலத்துடன் தொடர்புடைய வேலையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். அதோடு ராணுவம் மற்றும் காவல் துறையில் இருப்பவர்களும் தங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி காணக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். அதோடு தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
