Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 மாதம் இந்த 4 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கும்..
Mars Transit In Cancer On 20 October 2024: வேத ஜோதிடத்தில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார்.
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் இதுவரை மிதுன ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி, அதாவது இன்று கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசியில் செவ்வாய் வலுவிழந்து இருப்பார்.

இருப்பினும், இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்,. குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். முதலீடுகளைப் பொறுத்தவரை, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதில் முதலீடுகளை செய்தாலும், அதில் இருந்து நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். திருமணமானவர்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பெற்றோரின் ஒப்புதல் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான பலனைப் பெறுவார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications