Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
செவ்வாய் தனுசு ராசிக்கு செல்வதால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை நரகமாக மாறப்போகுதாம்...!
ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுமே முக்கியமானவை, மேலும் அவை தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். செவ்வாயின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகும். தற்போது செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகிறார், இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் பிரதிபலிக்கும். டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து குருபகவான் ஆளும் தனுசு ராசிக்கு இடம்பெயர்வது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது.

2025 ஆம் ஆண்டு நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் விளைவாக சில ராசிக்காரர்கள் பெரிய இழப்புகளையும் அதிக ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் 8 ஆம் வீட்டில் செவ்வாய் பிரவேசிக்கிறார். இந்த கிரக மாற்றத்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தொழிலில் லாபமும், முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி இருக்காது. பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும். புதிய வேலையைப் பெற நீங்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும்.
அவர்கள் தற்போதைய வேலையிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் மற்றவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி முன்னேற்றத்தை அடைய நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும். பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் கோபத்தைக் குறைப்பது நல்லது, அதிகப்படியான கோபத்துடன் செய்யப்படும் எதுவும் தீங்கு விளைவிக்கும்.
கன்னி
செவ்வாய் கன்னி ராசியின் 4-வது வீட்டில் நுழைவதால், குடும்ப சண்டைகள் மற்றும் வேலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம், இது உங்களின் மனஅமைதியை சீர்குலைக்கும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன், கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, எனவே பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வேலையில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க தயாராக வேண்டும். அலுவலகத்தில் பிரச்சினைகளைத் தவிர்க்க அவர்கள் தங்கள் அலுவலக சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர் ஆரோக்கியம் மட்டுமின்றி அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் 12வது வீட்டில் நடக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும், உறவுகளிலும் எதிர்பாராத சவால்களை எதிர்பாராத சவால்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் அவர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகலாம், இது மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எதிர்பாராத செலவுகள் அவர்களின் சேமிப்பைப் பாதிக்கலாம் மற்றும் அவர்களை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளலாம்.
தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவற்றைத் தீர்க்க பொறுமை மற்றும் சரியான உரையாடல்கள் தேவை. சரியான திட்டமிடல் மற்றும் உறுதியுடன் இந்த சவால்களை சமாளித்து அவர்கள் வெளிவரலாம். கவனம் செலுத்துவதும், ஒழுக்கமாக இருப்பதும், எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் இந்த காலகட்டத்தை கடக்க மிகவும் அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
