Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் தனலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Mars Retrograde Make Dhanlakshmi Rajyog 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் வலிமை, வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
செவ்வாய் ஒருவரது ஜாதத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எந்த ஒரு காரியத்தையும் தைரியமாக செய்வார் மற்றும் துணிச்சல் நிறைந்து இருப்பார். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். கடக ராசியில் பயணிக்கும் செவ்வாய் டிசம்பர் 07 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். கடக ராசியில் செவ்வாய் இருப்பதால் தனலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் சில ராசிக்காரர்கள் பண மழையில் நனையப் போகிறார்கள். இப்போது செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் தனலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நிதி ஆதாயம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். லட்சுமி தேவியின் ஆசியால் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டுகள் குவியும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications