Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
ஆகஸ்ட் 10-ல் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: விருச்சிகம் உள்ளிட்ட 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Mars Pluto Make Navpancham Rajyog On 10 August 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே வேளையில் சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் செவ்வாய் கன்னி ராசியில் இருந்து சனியுடன் சேர்ந்து சமசப்தக் யோகத்தையும், கும்ப ராசியில் ராகுவுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி செவ்வாய் புளூட்டோ ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் எதிரிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து, வெற்றியும் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றியும், பணமும் குவியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். குழந்தைகளால் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பிகும் செவ்வாயின் மீது சனியின் பார்வை இருப்பதால், சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும். மேலும் இக்காலத்தில் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொத்து தொடர்பான விஷங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
