Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் உருவாகும் மகாசேர்க்கை: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சு பணம் கொட்டப்போகுது!
Mars, Mercury, Sun Conjunction In Libra 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் சில கிரகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, சிறப்பான தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மூன்று கிரகங்களின் மகா சேர்க்கை நிகழவுள்ளது. அதில் அக்டோபர் 03 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். அதே சமயம் அக்டோபர் 27 வரை கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் துலாம் ராசியில் இருப்பார். அதே வேளையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் அக்டோபர் மாதத்தில் செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
அதோடு சில ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதோடு, சிக்கிய பணத்தையும் பெறுவார்கள். இப்போது துலாம் ராசியில் உருவாகும் மகாசேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். கலை, இலை, படைப்புத் துறையில் இருப்பவர்களின் செயல்திறன் மேம்படும். ஆளுமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகளின் உங்களின் வேலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதன் மூலம் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமாவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நடத்தை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications