Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குஜ்கேது யோகம்: ஜூனில் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Mars Ketu Conjunction Make KujKetu Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன.
அதில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம் தான் குஜ்கேது யோகம். இப்படிப்பட்ட யோகம் ஜூன் 07 ஆம் தேதி உருவாகவுள்ளது. ஏனெனில் இந்நாளில் செவ்வாய் சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குஜ்கேது யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். அதோடு வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குஜ்கேது யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் கேதுவின் சேர்க்கையால் குஜ்கேது யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை மற்றும் வணிகத்தை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். அதோடு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் கேதுவின் சேர்க்கையால் குஜ்கேது யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி, அதில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் கேதுவின் சேர்க்கையால் குஜ்கேது யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உயர் பதவிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
