Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
மார்கழி பௌர்ணமியில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. லட்சுமி தேவியின் அருளால் பணமும், வெற்றியும் குவியும்..
Margazhi Pournami 2026: நாம் 2026 புத்தாண்டை புதிய நம்பிக்கை, கனவு மற்றும் இலக்குகளுடன் தொடங்கியுள்ளோம். இந்த புத்தாண்டின் முதல் வாரத்திலேயே இந்த ஆண்டின் முதல் பௌர்ணமி வருகிறது. இந்த சிறப்பு வாய்ந்த மார்கழி மாத பௌர்ணமியானது ஜனவரி 03 ஆம் தேதி அன்று வருகிறது. இந்நாளில் ஆற்றில் நீராடுவது, வழிபாடுகளை செய்வது மற்றும் தானம் செய்வது போன்ற செயல்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.
ஜோதிடத்தின் படி, மார்கழி பௌர்ணமி நாளில் ஒருவர் தங்களது ராசிக்கேற்ப தானம் செய்தால், லட்சுமி தேவியின் ஆசியால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, வெற்றி போன்றவை கிடைக்கும். முக்கியமாக இந்நாளில் செய்யக்கூடிய தானம் இருமடங்கு பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்று மார்கழி பௌர்ணமி. இன்று உங்கள் ராசிப்படி எந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு ராசியையும் ஆளும் கிரகம் வேறு. எனவே அந்த அதிபதிக்கேற்ப எப்போதும் தானம் செய்தால், அது பல மடங்கு நன்மைகளைத் தரும். உங்களுக்கு ராசிப்படி எதை தானம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள், சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள், தேன் அல்லது சிவப்பு நிற பழங்களை தானம் செய்யலாம். இது தைரியத்தை அதிகரிக்கும், கடன் தொல்லையில் இருந்து விடுவிப்பதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசிக்காரர்கள் பௌர்ணமி நாளில் போர்வை, வெள்ளை நிற இனிப்புகள், அரிசி, நெய், தயிர் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் வசதிகள் அதிகரிக்கும், செல்வம் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பச்சை பயறு, பச்சை நிற காய்கறிகள், நெல்லிக்காய் அல்லது பேனா, பென்சில் போன்றவற்றை தானம் செய்யலாம். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசிக்காரர்கள் பௌர்ணமி நாளில் பால், அரிசி, வெள்ளை இனிப்பு பொருட்கள் அல்லது வெள்ளி பொருட்களை தானம் செய்யலாம். இது மன அமைதியைத் தருவதோடு, லட்சுமி தேவியின் ஆசி ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் பௌர்ணமி நாளில் கோதுமை, செம்பு பொருட்கள், சிவப்பு நிற பூக்கள் அல்லது வெல்லத்தை தானம் செய்யலாம். இது மதிப்பையும், கௌரவத்தையும், மரியாதையையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் பௌர்ணமி நாளில் பச்சை நிற ஆடைகள், பச்சை பயறு, நெய் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ஆடை, அரிசி, வாசனை திரவியங்கள் அல்லது நெய் போன்றவற்றை தானம் செய்யலாம். இது செல்வத்தையும், செழிப்பையும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசிக்காரர்கள் வெல்லம், சிவப்பு நிற ஆடைகள், பருப்பு போன்றவற்றை தானம் செய்யலாம். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் கொண்டைக்கடலை, வாழைப்பழம், மஞ்சள் நிற ஆடைகள் அல்லது மஞ்சள் போன்றவற்றை தானம் செய்யலாம். இது வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியைச் சேர்ந்தவர்கள் கருப்பு நிற எள்ளு விதைகள், கடுகு எண்ணெய், போர்வை போன்றவற்றை தானம் செய்யலாம். இப்படி செய்வதால் சனி பகவானால் சந்திக்கும் மோசமான விளைவுகள் நீங்கும் மற்றும் தடைகள் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் கருப்பு நிற போர்வை, எள்ளு விதைகள் அல்லது காலணி போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் பண பிரச்சனைகள் நீங்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மீன ராசிக்காரர்கள் கொண்டைக்கடலை, மஞ்சள் நிற ஆடைகள் அல்லது கடலை மாவு லட்டு போன்றவற்றை தானம் செய்யலாம். இது நிதி இழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, வருமானத்தை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications