Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
2026-ல் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஆடம்பரமான வாழ்க்கையை வாழப்போறாங்க..
Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி, நட்சத்திரங்களை மாற்றி மனித வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். அதோடு சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ யோகங்களை உருவாக்கி, 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் இவர் அவ்வப்போது சில யோகங்களையும் உருவாக்குவார். அப்படி 2026 ஆம் ஆண்டில் சுக்கிரன் ஒரு மகாபுருஷ ராஜயோகம் ஒன்றை உருவாக்கவுள்ளார். அதுவும் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் நுழையும் போது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார். இந்த ராஜயோகமானது 1 வருடம் கழித்து உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரப்போகிறது. இப்போது 2026-ல் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் ஆடம்பர வாழ்க்கையை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், சொத்து தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எடுக்கும் ரிஸ்க்குகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாமியார், மாமனாருடனான உறவு வலுவடையும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். செலவுகள் குறையும். நிதி நிலைமை மேம்படும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் 11 ஆவது வீட்டிற்கு சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்பள்ளது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும், புகழும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications